உலகம்

ஹோட்டலில் தண்ணீருக்குப் பதில் ஆசிட்! சிகிச்சையில் 2 குழந்தைகள்; உணவக மேலாளர் கைது

4th Oct 2022 03:23 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த செப்டம்பர் 27 அன்று பாகிஸ்தானில் ஒரு பிரபல உணவகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டபோது அதில் தண்ணீருக்குப் பதில் ஆசிட் இருந்தது பின்னர் தெரிந்தது. 

'ஊழியர்கள் விநியோகித்த வாட்டர் பாட்டிலைக் கொண்டு என் மருமகன் கைகளைக் கழுவினான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் அழத் தொடங்கினான். அப்போதுதான் அமிலம் பட்டு அவன் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது தெரிய வந்தது' என்று கூறினார். 

அதுபோல மற்றொரு தண்ணீர் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்ததால் அவரது இரண்டரை வயது மருமகள் வஜிஹா வாந்தி எடுத்துள்ளார். 

ADVERTISEMENT

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன், சிறுமி இருவருக்கும் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உணவக மேலாளரை கைது செய்துள்ளனர். 

இதையும் படிக்க | காஞ்சிபுரம் கேஸ் சிலிண்டர் விபத்து: பலி 8 ஆக உயர்வு!

ADVERTISEMENT
ADVERTISEMENT