உலகம்

செல்போன், கேமரா, ஐ-போன்.... இனி 'டைப் சி' சார்ஜர் மட்டும்தான்!

4th Oct 2022 04:38 PM

ADVERTISEMENT

 

2024ஆம் ஆண்டு முதல் கைப்பேசி, ஐ-போன், கேமரா, கையடக்கக் கணினி (Tab) என அனைத்திற்கும் டைப் சி வகை சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. 

மின்னணுக் கழிவுகளைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய அரசு அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மின்னணுப் பொருள்களை வகை வகையான முறைகள் மூலம் சார்ஜ் செய்யப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு மின்னணுப் பொருள்களுக்கும் ஒவ்வொரு சார்ஜ் அவசியமாகிறது. இதனால் மின்னணுக் கழிவுகள் அதிகமாகிறது.  

ADVERTISEMENT

இதனைத் தவிர்க்கும் வகையில், செல்போன், ஐ-போன், கையடக்கக் கணினி (Tab), மடிக்கணினி (Laptop) என அனைத்திற்கும் டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதாக ஐரோப்பியா யூனியன் அறிவித்துள்ளது.

இது ஐரோப்பிய நாடாளுமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் செல்போன்கள், கையடக்க கணினி, கேமரா உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் பொதுவாக டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படும். 2026ஆம் ஆண்டு முதல் லேப்டாப்களுக்கு இந்த வகை சார்ஜர் பயன்பாடு கொண்டுவரப்படும். 

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இது குறித்து சட்டம் கொண்டுவருவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 602 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 13 உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தும், 8 பேர் வாக்களிக்காமலும் தவிர்த்துள்ளனர். 

நாட்டில் உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளைக் குறைப்பதற்காகவும், நுகர்வோரின் தேர்வை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நுகர்வோராகிய நாட்டு மக்கள் தங்கள் மின்னணு சாதனங்களுக்காக வேறு வேறு சார்ஜர்களைத் தேடி அலைய வேண்டாம். ஒரே வகையான சார்ஜர் மூலம் சிறிய ரகம், பெரிய ரகம் என தங்கள் மின்னணு பொருள்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம்.

100 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜிங் முறை கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான செல்போன்கள், கையடக்கக் கணினி, ஏர்பேட், கேமரா, விடியோகேம் உபகரணங்கள், ஸ்பீக்கர்ஸ், கீ-போர்டு, சுட்டி, என அனைத்திற்கும் டைப்-சி சார்ஜிங் முறைகே கொண்டுவரப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT