உலகம்

பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ படம் வெளியீடு

3rd Oct 2022 04:30 PM

ADVERTISEMENT


லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ புதிய குடும்ப படம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கன்சோர்ட் கமீலா பார்க்கர், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் கொண்ட புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் பற்றி வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடைபெற்ற நாளுக்கு முந்தைய இரவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் கிறிஸ் ஜாக்சன்.

குடும்ப புகைப்படத்தில் இளவரசி கேட் மிடில்டன், நீண்ட கருப்பு கவுன் அணிந்திருக்கிறார். இளவரசர் வில்லியம் கிளாசிக் சூட் அணிந்திருக்கிறார். கருப்பு நிறத்தில் கைவேலைப்பாடு செய்யப்பட்ட கருப்பு ஆடையை கமீலா அணிந்திருக்க, மகனைப் போலவே மன்னர் மூன்றாம் சார்லஸ் கிளாசிக் சூட் அணிந்திருக்கிறார்.

இந்தக் குடும்பப் படத்தில் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் இடம்பெறாததை பலரும் கவனித்தே உள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT