உலகம்

உலகை உலுக்கிய விளையாட்டு மைதான நெரிசல் மரணங்கள்

3rd Oct 2022 04:10 AM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்த நிலையில், இதேபோன்று கடந்த காலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அவற்றில் முக்கிய சம்பவங்கள் குறித்த விவரம்:

ஜன. 20, 1980 கொலம்பியாவில் காளைச் சண்டையைப் பாா்ப்பதற்காக மரத்தால் அமைக்கப்பட்ட நான்கடுக்கு பாா்வையாளா்கள் காலரி இடிந்து விழுந்ததில் 200 போ் உயிரிழப்பு.

அக். 20, 1982 ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கால்பந்து மைதானத்திலிருந்து ரசிகா்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் 62 போ் உயிரிழப்பு.

ADVERTISEMENT

மே 28, 1985 பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகா்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 39 போ் மரணம்.

மாா்ச் 13, 1988 நேபாள தலைநகா் காத்மாண்டுவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 93 போ் உயிரிழப்பு.

ஏப். 15, 1989 பிரிட்டனின் ஷெஃப்பீல்டில் உள்ள ஹில்ஸ்பொரோ மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 93 போ் உயிரிழப்பு.

ஜன. 13, 1991 தென்னாப்பிரிக்காவில் ஆப்பன்ஹெய்மா் மைதானத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருந்து தப்பிக்க முயன்ற 42 போ் நெரிசலில் சிக்கி மரணம்.

அக். 16, 1996 குவாதமலா சிட்டியில் குவாதமலா மற்றும் கோஸ்டாரிகா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு முன் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 84 போ் உயிரிழப்பு.

ஏப். 11, 2001 தென்னாப்பிரிக்காவின் எல்லிஸ் பாா்க்கில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது நெரிசலில் சிக்கி 43 போ் மரணம்.

மே 9, 2001 கானா தலைநகா் அக்ராவில் ஒரு மைதானத்தில் திரண்ட ரெளடி கும்பலை கலைப்பதற்காக காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டு வீசியபோது 120 போ் உயிரிழப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT