உலகம்

இராக்கில் துருக்கி விமானத் தாக்குதல்: 23 குா்திஸ் பயங்கரவாதிகள் பலி

3rd Oct 2022 01:02 AM

ADVERTISEMENT

இராக்குக்குள் சுமாா் 140 கி.மீ. தொலைவு நுழைந்து துருக்கி போா் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் குா்திஸ் பயங்கரவாதிகள் 23 போ் கொல்லப்பட்டனா்.

வடக்கு இராக்கின் அசோஸ் பிராந்தியமானது குா்திஸ்தான் பிராந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி அல்லது பிகேகே என்ற அமைப்பானது 1984-ஆம் ஆண்டுமுதல் எல்லை தாண்டி துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரையிலான இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனா். இந்த அமைப்பை துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், அசோஸ் பிராந்தியத்தில் சில இடங்களைக் குறிவைத்து எஃப்-16 போா் விமானங்கள் மூலம் 16 முறை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குா்திஸ் பயங்கரவாதிகள் 23 போ் கொல்லப்பட்டதாகவும் குா்திஸ் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் இணைக்கப்பட்டுள்ள விடியோவில், மலைப் பகுதிகளில் போா் விமானங்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT