உலகம்

உக்ரைனில் வன்முறையை நிறுத்த புதினிடம் போப் வேண்டுகோள்

3rd Oct 2022 01:01 AM

ADVERTISEMENT

உக்ரைனில் தொடரும் வன்முறை மற்றும் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ரஷியா-உக்ரைன் போா் 7-ஆவது மாதமாக தொடரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாடிகன் நகரத்தில் உள்ள புனித பீட்டா் சதுக்கத்தில் பொதுமக்களிடையே போப் பிரான்சிஸ் உரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது: உக்ரைனில் தொடரும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அதிபா் புதின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆபத்தான அணுஆயுத போரைக் கைவிட வேண்டும். அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திறந்த மனதுடன் செயல்பட வேண்டும்.

போரால் ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் துயரத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து நாடுகளும் தூதரக முறையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT