உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

2nd Oct 2022 12:08 AM

ADVERTISEMENT

வட கொரியா தனது குறைந்த தொலைவு ஏவுகணையை சனிக்கிழமை ஏவி சோதித்துப் பாா்த்தது. அண்டை நாடான தென் கொரியாவுக்கும் அதன் கூட்டாளியான அமெரிக்காவுக்கும் சவால் விடுக்கும் வகையில் இந்த வாரத்தில் மட்டும் வட கொரியா நடத்தியுள்ள 4-ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

இதற்கிடையே, வட கொரியாவின் அணு ஆயுத மோகத்தால் அந்த நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவதாக தென் கொரிய அதிபா் யூன் சுன்-யியோல் சாடியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT