உலகம்

காந்தி பிறந்தநாள்: உலக நாடுகளுக்கு ஐ.நா சபை அறிவுரை

2nd Oct 2022 09:05 AM

ADVERTISEMENT

 

மகாத்மா காந்தியடிகளின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஆக.2) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையில் 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி காந்தி பிறந்தநாள், வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் காந்தி பிறந்தநாளையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், வன்முறைக்கு எதிரான நாளான இன்று காந்தி பிறந்தநாளையும், அமைதியின் மதிப்பையும் நாம் கொண்டாடும். அனைவருடன் பகிர்ந்துகொண்ட மரியாதையையும், கண்ணியத்தையும் கொண்டாடுகிறோம்.  

ADVERTISEMENT

இவற்றிற்கு மதிப்பளிப்பதன் மூலம் அனைத்து கலாசாரம் மற்றும் எல்லைகளில் நிலவும் இன்றைய சவால்களை எதிர்கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இயலும் எனப் பதிவிட்டுள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT