உலகம்

இந்தோனேசிய கால்பந்து போட்டியில் ரசிகர்கள் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு!

2nd Oct 2022 12:33 PM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்களால் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன. இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். 

இதையும் படிக்க: மாலத்தீவில் ஜாலி! அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)

ADVERTISEMENT

கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்றனர். அப்போது களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டனர். இதை கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கலவரம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். 

180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்லனர். 100க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 127 பேர் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் போலீஸ் அதிகாரிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT