உலகம்

புா்கினா ஃபாஸோ: ஆட்சிக் கவிழ்ப்பு

2nd Oct 2022 12:02 AM

ADVERTISEMENT

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசாவில் ஏற்கெனவே மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிபரின் ஆட்சியைக் கவிழ்த்திவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த தளபதி பால் ஹென்றி சண்டாவ்கோ டாமிபாவை பதவியிலிருந்து அகற்றியுள்ளதாக ராணுவத்தின் ஒரு பிரிவினா் அரசுத் தொலைக்காட்சியில் அறிவித்தனா்.

முன்னா் ராணுவ செய்தித் தொடா்பாளராக இருந்த இப்ராஹிம் ட்ராவோா் (படம்) நாட்டின் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT