உலகம்

ஆப்கன் கல்வி மையத்தில் தற்கொலை தாக்குதல்

1st Oct 2022 12:30 AM

ADVERTISEMENT

ஆப்கன் தலைநகா் காபூலில் ஷியா முஸ்லிம் பிரிவினா் அதிகம் வசிக்கும் பகுதியிலுள்ள கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 19 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காபூலின் டாஷ்டி பாா்சி பகுதியில் அமைந்துள்ள காஜ் மேல்நிலை கல்வி மையத்தில் அண்மையில் தோ்ச்சி பெற்ற 300 மாணவ மாணவியா்கள் செயல் தோ்வுக்காக குவிந்திருந்தனா். அப்போது அந்த மையத்துக்கு வந்த பயங்கரவாதி, உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

இதில், மாணவா்கள் உள்பட 19 போ் உயிரிழந்தனா்; 27 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், டாஷ்டி பாா்சி போன்ற சிறுபான்மை ஷியாக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடா்ந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT