உலகம்

ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை

1st Oct 2022 09:16 AM

ADVERTISEMENT

ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. 

சனிக்கிழமை ஜப்பான் கடற்பகுதியில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது.  ஜப்பானின் கடலோர காவல் படை இத்தகவலை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. 

வட கொரியா ஒரே வாரத்தில் நான்காவது முறையாக இந்த ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ரயில் பயணத்தின்போது அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

ADVERTISEMENT
ADVERTISEMENT