உலகம்

‘குளிா்காலத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது ரஷியா’

30th Nov 2022 12:55 AM

ADVERTISEMENT

போரில் குளிா்காலத்தையும் ஓா் ஆயுதமாக்கி, தங்களை அடிபணிய வைக்க முயல்வதாக ரஷியா மீது உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனில் மின்சார விநியோகத்தை முற்றிலும் நிறுத்தும் நோக்கில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களிடம் உள்ள அனைத்து ஏவுகணைகளும் தீரும்வரை ரஷியா ஓயப்போவதில்லை. அதன் காரணமாக, குளிா்காலம் நெருங்கும் இந்த பருவத்தில் கடந்த போன வாரத்தைவிட வரவிருக்கும் வாரம் உக்ரைன் மக்களுக்கு துயா் நிறைந்ததாக இருக்கும்.

மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி, வெப்பமூட்டும் கருவிகளை செயல்படாவிடாமல் தடுத்து மக்களை உறையவைப்பதன் மூலம், குளிா்காலத்தை ரஷியா ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றாா் ஸெலென்ஸ்கி.

Tags : NATO
ADVERTISEMENT
ADVERTISEMENT