உலகம்

உக்ரைனுக்கு உறுப்பினா் அந்தஸ்து: நேட்டோ உறுதி

30th Nov 2022 12:52 AM

ADVERTISEMENT

தங்களது அமைப்பில் உக்ரைனை இணைத்துக் கொள்வதில் உறுதியுடன் இருப்பதாக நேட்டோ அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

ருமேனியாவில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும், போரில் உக்ரைனுக்கு அளித்து வரும் உதவிகளைத் தொடரவும் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்டது.

தங்களது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில், நேட்டோ அமைப்பு இவ்வாறு உறுதிமொழி அளித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : NATO
ADVERTISEMENT
ADVERTISEMENT