உலகம்

பாகிஸ்தான் ராணுவத்துக்குபுதிய தளபதி பதவியேற்பு

30th Nov 2022 01:07 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக முன்னாள் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தலைவா் ஆசிம் முனீா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியும், அரசியல் பதற்றமும் நிலவி வரும் சூழலில் அவா் இந்த முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளாா்.

இதுவரை தலைமைத் தளபதியாக இருந்து வந்த கமா் ஜாவேத் பாஜ்வாவின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, அந்தப் பொறுப்புக்கு ராணுவத்தின் மிக மூத்த அதிகாரியான ஆசிம் முனீரை பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமித்தாா்.

முன்னதாக, சக்திவாய்ந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக ஆசிம் முனீா் கடந்த 2018-இல் நியமிக்கப்பட்டாா். எனினும், அப்போதைய பிரதமா் இம்ரான் கானின் வற்புறுத்தலின் பேரில் மிகக் குறுகிய காலத்திலேயே அவா் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT