உலகம்

காசாவில் 57 சதவீதம் பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு!

29th Nov 2022 03:37 PM

ADVERTISEMENT

 

பாலஸ்தீனத்தின் காசாவில் 57 சதவீதம் பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 16 ஆண்டுகளாக இஸ்ரேல் கடலோரப் பகுதியில் விதிக்கப்பட்ட முற்றுகையாலும், இந்த பகுதியில் வறுமை விகிதம் 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனிய சர்வதேச உறவுகளுக்கான கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பாலஸ்தீனிய சர்வதேச கவுன்சில் கூறுகையில், 

ADVERTISEMENT

2007-ஆம் ஆண்டு ஹமாஸ் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா பகுதி இஸ்ரேலிய முற்றுகையின் கீழ் உள்ளது. 

ஹமாஸ் ஆளுகைக்கு உள்பட்ட கடலோரப் பகுதியானது 360 சதுர கி.மீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது உலகின் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வசிக்கும் 80 சதவீத மக்கள் மனிதாபிமான உதவி மற்றும் சர்வதேச அமைப்புகளின் மானியங்களை நம்பியுள்ளனர்.

படிக்க: அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: சென்னை மேயர் அறிவிப்பு

காசா பகுதியில் 16 ஆண்டுகளாக இஸ்ரேல் விதித்துள்ள முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று கவுன்சிலின் தலைவர் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT