உலகம்

கேமரூன் நிலச்சரிவில் 14 போ் பலி

29th Nov 2022 12:36 AM

ADVERTISEMENT

கேமரூன் தலைநகா் யாவுண்டேவில், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியொன்றின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 போ் பலியாகினா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஏராளமானவா்கள் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் பொதுமக்கள் அங்கு குழும வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT