உலகம்

பொதுமுடக்கத்தை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்!

28th Nov 2022 02:02 PM

ADVERTISEMENT

சீனாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்காக அந்நாட்டு மிகக் கடுமையான கட்டுப்பாட்டுகளை அமல்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, சீனாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

அங்குள்ள முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கரோனா பொதுமுடக்கத்தை தளர்த்த வேண்டும் என்று கூறி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

வூஹான், ஹாங்காங், செங்டு, குவாங்சூ ஆகிய நகரங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.  

சில மாதங்களுக்கு முன்னா் சீனாவின் வா்த்தகத் தலைநகரான ஷாங்காயில் பல வாரங்களுக்கு நீடித்த கரோனா முடக்கத்துக்கு எதிராக பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT