உலகம்

நிலவு வட்டப் பாதையில் நாசா கலம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா இந்த மாதம் அனுப்பிய ஆய்வுக் கலம், நிலவின் தொலைதூர சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. என்ஜின்களை இயக்கியதன் மூலம் அந்தப் பகுதிக்கு விண்கலம் வெள்ளிக்கிழமை திருப்பப்பட்டது.

‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் தாமதமாக செயல்படுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT