உலகம்

சீனாவில் புதிய உச்சம்: 40 ஆயிரத்தை நெருங்கும் கரோனா! 

27th Nov 2022 11:14 AM

ADVERTISEMENT

சீனாவில்  கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

சீனாவின் வூஹான் நகரில் கரோனா கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை கடந்த வியாழக்கிழமை தொட்டது. 

சீனாவில் நேற்று வரை மொத்தம் 3,07,802 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே, கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் முதல்முறையாக கரோனாவுக்கு ஒருவா் இந்த வாரம் பலியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தினசரி கரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்!

முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT