உலகம்

கரோனா வைரஸுக்குள் பாக்கெட் போன்ற அமைப்பு: கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

26th Nov 2022 05:37 PM

ADVERTISEMENT

லண்டன்: மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா வைரஸுக்குள் தையல்காரரால் தைத்துக் கொடுக்கப்படும் பாக்கெட் போன்ற அம்சம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த பாக்கெட் போன்ற அம்சம்தான், மனித செல்களுக்குள் மிக எளிதாக ஒட்டிக் கொள்ள காரணமாக அமைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால்தான், சில கரோனா வைரஸ்கள் மட்டும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உயிரைப் பறிக்கும் அனைத்து கரோனா வைரஸ்களிலுமே இந்த பாக்கெட் போன்ற அமைப்பு அமைந்திருப்பதாகவும், மெர்ஸ், ஒமைக்ரோன் போன்ற கரோனா வைரஸ்களில் இந்த அமைப்பு இருப்பதாகவும், லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் கரோன வைரஸ்களில் இந்த பாக்கெட் போன்ற அமைப்பு காணப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

பிரிஸ்டோல் பல்கலைக்கழகம் நடத்தியிருக்கும் இந்த ஆய்வில், கரோனா வைரஸை முற்றிலும் அழிப்பதற்கான ஆராய்ச்சியில் இது மிக முக்கிய திருப்பமாக இருக்கும் என்றும், தற்போது பரவி வரும் மற்றும் எதிர்காலத்தில் பரவும் உயிர்க்கொல்லி வைரஸ்களையும் அழிப்பதற்கான முறையைக் கண்டறிய உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சயின்ஸ் அட்வான்சஸ் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT