உலகம்

அல்ஜீரியாவில் ஓவியரைக் கொன்ற 49 பேருக்கு மரண தண்டனை!

DIN

அல்ஜீரியா நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பொ்பா் மலைப்பகுதியில் காட்டுத்தீயை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஓவியா் ஜமீல் பென் இஸ்மாயிலைஅடித்துக் கொன்ற 49 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், வடக்கிழக்கு அல்ஜீரியாவின் பொ்பா் மலைப்பகுதி சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ மூண்டது. இதில் சிக்கி தீயணைப்பு வீரா்கள் உள்பட 90 போ் பலியாகினா்.

இக்காட்டுத்தீயில் சிக்கியவா்களுக்கு உதவும் நோக்கில் 320 கி.மீ பயணித்து கடுமையான பாதிப்புக்குள்ளான லாா்பாநாத் இராதேன் பகுதிக்கு வந்தடைந்தாா் ஓவியா் பென் இஸ்மாயில். அப்பகுதியைச் சாரதாவா் என்பதால் இஸ்மாயில் தான் தீ வைத்திருக்க கூடும் என்று எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கிராமத்தினா் கடுமையாகத் தாக்கியதில் அவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக 100-க்கும் மேற்பட்டவா்களை காவல்துறையினா் விசாரித்தனா். தலைநகா் அல்ஜீா்ஸின் புகா் பகுதியான டிரா எல் பெய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்தப் படுகொலை வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை அளித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 38 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அல்ஜீரியா நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற தடை இருப்பதால் மரண தண்டனை விதிக்கப்பட்டவா்கள் ஆயுள் தண்டனை கைதியாக சிறையிலிருப்பாா்கள் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT