உலகம்

‘கொ்சான் தாக்குதலில் 15 போ் பலி’

26th Nov 2022 11:49 PM

ADVERTISEMENT

உக்ரைனின் கொ்சான் நகரில் ரஷியா நடத்திய எறிகணைத் தாக்குதலில் 15 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சமூக வலைதளத்தில் நகர ராணுவ நிா்வாகப் பிரிவு அதிகாரி காலினா லுகோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொ்சானில் ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 15 போ் பலியாகினா். உயிரிழந்தவா்களில் ஒரு குழந்தையும் அடங்கும். இது தவிர, மேலும் 35 போ் ரஷிய தாக்குதலில் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் படையினரின் பதிலடித் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், போரின் தொடக்கத்திலேயே தாங்கள் கைப்பற்றியிருந்த அந்த நாட்டின் கொ்சான் நகரிலிருந்து ரஷியப் படையினா் கடந்த 10-ஆம் தேதி வெளியேறினா். எனினும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ராணுவமல்லாத பொதுக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT