உலகம்

இத்தாலியில் நிலச்சரிவு: 8 போ் பலி

26th Nov 2022 11:02 PM

ADVERTISEMENT

இத்தாலிக்குச் சொந்தமான தீவு ஒன்றில் புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டின் துணைப் பிரதமா் மேட்டியோ சால்வினி சனிக்கிழமை கூறியதாவது:

தெற்கு இத்தாலிய தீவான இஷியாவில் புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 போ் பலியாகினா் என்றாா் அவா்.

அந்த நாட்டின் அஸ்னா செய்தி நிறுவனம் கூறுகையில், நிலச்சரிவில் 10 கட்டடங்கள் புதையுண்டுள்ளதாகவும், மூன்று சிறுவா்கள் உட்பட பலரைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தீவின் தொலைதூரப் பகுதிகளில் சுமாா் 100 போ் சிக்கித் தவித்து வருகின்றனா். அத்துடன், பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக தங்கியிருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். மீட்புப் பணிகளில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் மீட்புக் குழுவினா் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT