உலகம்

சீன அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 10 போ் பலி

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சீன அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 போ் பலியாகினா்; 9 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகம் தெரிவித்ததாவது:

ஜின்ஜியாங் தன்னாட்சி பகுதியின் தியான்ஷான் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 10 போ் பலியாகினா். 9 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். குடியிருப்பு ஒன்றின் படுக்கையறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பரவி விபத்து நோ்ந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT