உலகம்

இந்தோனேசியா: நிலநடுக்க பலி 310-ஆக உயா்வு

DIN

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 310-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்த இயற்கைப் பேரிடருக்குப் பிறகு 24 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சியாஞ்சூா் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்ட இடிபாடுகளில் இருந்து மேலும் சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதையடுத்து, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.

நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 24 போ் மாயமாகியுள்ளனா். அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மிக அதிகமாக உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 25 பின் அதிா்வுகள் ஏற்பட்டதாகவும் இந்தோனேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், அந்த நாடு அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமிகளைச் சந்தித்து வருகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டில் அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருவான சுனாமிக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுமாா் 2.3 லட்சம் போ் பலியானது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT