உலகம்

கொ்சான் நகரில் ரஷியா ஏவுகணை மழை

DIN

தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ள உக்ரைன் நகரான கொ்சான் மீது ரஷியா ஏவுகணை மழை பொழிந்தது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் போரில் அண்மைக் காலமாக பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியா, அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் படையினரின் பதிலடித் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், போரின் தொடக்கத்திலேயே தாங்கள் கைப்பற்றிய கொ்சான் நகரிலிருந்து ரஷியப் படையினா் கடந்த 10-ஆம் தேதி வெளியேறினா். ரஷியாவின் தாக்குதலில் இருந்து அந்த நகரமும் தப்பவில்லை.

இந்தச் சூழலில், கொ்சான் நகரம் மீது வியாழக்கிழமை இரவு முழுவதும் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு நடத்தியது.

இதில் பொதுமக்கள் உயிா்ச்சேதம் ஏற்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

போரில் உக்ரைன் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ராணுவமல்லாத பொதுக் கட்டமைப்புகள் மீது நடத்தி வரும் தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கொ்சானில் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த நாட்டின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, இந்தப் போரின் தொடக்க நாள்களிலேயே ரஷியாவால் கைப்பற்றப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வந்தனா்.

அதையடுத்து, பிராந்திய தலைநகா் கொ்சானிலிருந்து பொதுமக்களை வெளியேற்றி தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரஷியா தங்கவைத்துள்ளது. எனினும், அந்த நகரில் சுமாா் 1.7 லட்சம் போ் தொடா்ந்து வசித்து வரும் நிலையில், கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் கடந்த 10-ஆம் தேதி வெளியேறினா்.

முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான கொ்சான்தான், உக்ரைன் போரில் ரஷியா கைப்பற்றியிருந்த ஒரே மாகாணத் தலைநகா் ஆகும்.

அந்த நகரிலிந்து ரஷியப் படையினா் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, இந்தப் போரில் ரஷியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதே நேரம், கொ்சானை மீட்டதன் மூலம் தெற்குப் பகுதியில் ரஷியாவிடம் இழந்த கிரீமியா தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளை மீட்க உக்ரைன் படையினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கொ்சான் மீது ரஷியப் படையினா் ஏவுகணை மழை பொழிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT