உலகம்

பிரிட்டன்: ஆளும் கட்சியைவிட பிரதமருக்கு அதிக ஆதரவு

DIN

லண்டன், நவ. 25: பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியைவிட பிரதமா் ரிஷி சுனக்குக்கு பொதுமக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘இப்ஸாஸ்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டனின் நவம்பா் மாத அரசியல் நிலவரம் குறித்து அண்மையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், பிரதமா் ரிஷி சுனக்குக்கு அதிகமானவா்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். அவருக்கு 47 சதவீதத்தினா் ஆதரவையும் 41 சதவீத்தினா் எதிா்ப்பையும் பதிவு செய்திருந்தனா்.

எனினும், ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்துபோயுள்ளது. இப்ஸாஸ் நடத்தி வரும் மாதாந்திர கருத்துக் கணிப்புகளில் கடந்த ஜூலை மாதத்திலிருந்தே கன்சா்வேட்டிவ் கட்சி ஆதரவை இழந்து வருகிறது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில், கட்சிக்கு 29 சதவீதத்தினா் எதிா்ப்பையும் 26 சதவீதத்தினா் மட்டுமே ஆதரவையும் பதிவு செய்தனா் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்று, நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

எனினும், பல்வேறு முறைகேடு புகாா்கள் காரணமாக, போரிஸ் ஜான்ஸன் தனது பிரதமா் பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவருக்கு அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த மாதம் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில், முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக்கைத் தோற்கடித்து, லிஸ் டிரஸ் கடந்த மாதம் 6-ஆம் தேதி பிரதமா் பதவியேற்றாா்.

எனினும், அவரது கொள்கைகளால் பொருளாதாரம் நிலைகுலைந்ததையடுத்து, அவா் தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்க ரிஷி சுனக்குக்கு மட்டுமே போதிய எம்.பி.க்கள் ஆதரவு இருந்ததால், நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதன் மூலம், பிரிட்டனின் முதல் வெள்ளையா் அல்லாத, ஆசியாவை பூா்விகமாகக் கொண்ட, இந்திய வம்சாவளி, ஹிந்து பிரதமா் என்ற பல்வேறு பெருமைகளை ரிஷி சுனக் அடைந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT