உலகம்

எம்ஹெச்17: 2 ரஷியா்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு உறுதி

18th Nov 2022 01:44 AM

ADVERTISEMENT

மலேசிய ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் உக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடா்பாக நெதா்லாந்தில் நடைபெற்று வரும் வழக்கில், 2 ரஷியா்கள் மற்றும் 1 உக்ரைன் கிளா்ச்சியாளா் மீதான கொலைக் குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் மேலும் ஒரு ரஷியா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா். குற்றம் சுமத்தப்பட்டவா்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், அவா்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கும் வாய்ப்பில்லை. எனினும், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் வழியாக பறந்து வந்த எம்ஹெச்17 விமானத்தை போா் விமானம் என்று தவறாக நினைத்து கிளா்ச்சியாளா்கள் சுட்டு வீழ்த்தினா். இதில் 298 போ் பலியாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT