உலகம்

புடவை அணிந்து திருமண விழாவிற்கு சென்ற 2 ஆண்கள்! (விடியோ)

15th Nov 2022 09:44 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் சிகாகோவில் திருமண விழாவிற்கு புடவை அணிந்து வந்து, மணமகனை ஆச்சரியப்படுத்திய இரு ஆண் நண்பர்களின் புகைப்படங்கள் மற்றும் விடியோ வைரலாகி வருகிறது. 

பாலின பாகுபாட்டை உடைப்பதற்காக சில ஆண்கள் தன் நண்பரது திருமண விழாவிற்கு புடவைகளை கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த விடியோவில் பெண் அந்த ஆண்களுக்கு புடவை கட்டுவதில் உதவி செய்வதை பார்க்க முடிகிறது. மணமகனும் மணமகளும் இந்திய நண்பர்கள் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிகிறது. இவர்களை பார்த்ததும் மணமகன் சிரித்து விடுவார். பின்பு கட்டிப்பிடித்து தழுவிக்கொள்வார். அத்துடன் விடியோ முடிவடைகிறது. 

“மணமகனின் உற்ற 2 ஆண் நண்பர்கள் புடவையில் சிக்காக்கோவின் மிச்சிகன் ஏவியில் நடந்து செல்லும் வழக்கமான திருமண காலை நிகழ்வு” என பாரகோன் ப்ளிம்ஸ் தனது இன்ஸ்டாகிரம் விடியோவை பகிர்ந்து பதிவிட்டு இருந்தார்.

 

ADVERTISEMENT

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chicago Wedding Videographers (@paraagonfilms)

ADVERTISEMENT
ADVERTISEMENT