பாலி: சவாலான காலங்களில் இந்தோனேசியாவுடன் இந்தியாவின் உறவு உறுதியாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த உறுதி அமைந்தது என்றும் அவர் கூறினார்.
ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றிய போது 'ஆபரேஷன் சமுத்ரா மைத்ரி' என்ற நடவடிக்கையை இந்தியா 2018-ல் மேற்கொண்டதை நினைவு கூர்ந்தார்.
இந்தியாவும் இந்தோனேசியாவும் 90 கடல் மைல்கள் தொலைவில் இருக்கலாம், உண்மையில் அது 90 கடல் மைல் தொலைவு அல்ல, 90 கடல் மைல்கள் நெருக்கமாக உள்ளோம் என்றார்.
இதையும் பார்க்க: ஒன்று கூடி களைகட்டிய 80ஸ் நடிகர்-நடிகைகள்! - புகைப்படங்கள்
இந்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோவில் உருவாகும் நேரத்தில், இந்தோனேசியாவின் ராமாயண பாரம்பரியத்தையும் நாங்கள் பெருமையுடன் நினைவுகூருகிறோம் என்றார்.
இதையும் பார்க்க: சிறையில் இருந்து விடுதலையான நளினி, முருகன், சாந்தன் - புகைப்படங்கள்
19 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 ஒன்றியத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளது.