உலகம்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த கம்போடியா பிரதமருக்கு கரோனா

15th Nov 2022 11:39 AM

ADVERTISEMENT

 

பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவில் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்த கம்போடியா பிரதமருக்கு கரோனா உறுதியான நிலையில், அவர் பாலியிலிருந்து கிளம்பினார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் தங்கியிருக்கும் நிலையில், கம்போடியா பிரதமர் ஹன் சென்னுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் உடனடியாக பாலியிலிருந்து புறப்பட்டார்.

இதையும் படிக்க.. காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!

ADVERTISEMENT

திங்கள்கிழமை இரவு, ஹன் சென்னுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநாட்டில் பங்கேற்காமல் அவர் நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அதிபருக்கு செவ்வாய்க்கிழமை காலை,  கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி, நேற்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். அங்கு, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோரை சந்திக்கவிருக்கிறார்.

இதையும் படிக்க.. 35 துண்டுகளாக்கப்பட்ட காதலி: காதலனின் திடுக்கிடும் வாக்குமூலம்; திரில்லர் படத்துக்கு சற்றும் குறையாத சம்பவங்கள்

சா்வதேச அளவில் ஜி20 கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. உலகின் சுமாா் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், சுமாா் 75 சதவீத வா்த்தகத்தையும், சுமாா் 65 சதவீத மக்கள்தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. அந்நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சா்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

கரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷியாவின் போா், சா்வதேச கடன் பிரச்னை அதிகரிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இரு நாள்களுக்கு நடைபெறும் மாநாட்டில் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

உக்ரைன் மீதான போா் நெருக்கடி காரணமாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

ஜி20 தலைமை
பாலி மாநாடு முடிவடையும்போது, ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளாா். கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்கவுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு வருகை தருமாறு உறுப்பு நாடுகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளேன் என்று பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும். சா்வதேச அளவிலான சமச்சீா் வளா்ச்சி, ஒருங்கிணைந்த எதிா்காலம் ஆகியவற்றை அக்கொள்கை உறுதி செய்யும்’ என்றும் பிரதமர் மோடி குறிப்பிடப்பட்டுள்ளாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT