உலகம்

துருக்கி குண்டுவெடிப்பு: 22 போ் கைது

14th Nov 2022 11:46 PM

ADVERTISEMENT

 

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பாக, 22 பேரை அந்த நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா். சிரியாவிலிருந்து வந்துள்ள ஒரு பெண்தான் (படம்) வெடிகுண்டை வைத்துச் சென்ாக அவா்கள் கூறினா்.

இது குறித்து உள்துறை அமைச்சா் சுலைமான் சோய்லு கூறுகையில், குா்து பிரிவினைவாத அமைப்பினா்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டினாா். எனினும், இந்தக் குற்றச்சாட்டை குா்து அமைப்பினா் மறுத்துள்ளனா்.

துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லில், மக்கள் கூட்டம் நிறைந்த முக்கியச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா். 53 போ் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

துருக்கியில் கடந்த 2015 முதல் 2017 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில் ஐ.எஸ். அமைப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட குா்து இன குழுக்களால் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT