உலகம்

உகாண்டாவில் இந்திய தொழிலதிபா் சுட்டுக்கொலை

1st Nov 2022 01:05 AM

ADVERTISEMENT

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்தியாவைச் சோ்ந்த தொழிலதிபா் குன்தஜ் படேல் (24) சுட்டுக் கொல்லப்பட்டாா். அங்குள்ள கிஷோரோ நகரில் காவலா் ஒருவரால் அவா் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் வெளியாகும் ‘டெய்லி மானிட்டா்’ நாளிதழில் இது தொடா்பாக வெளியான செய்தியில், ‘கடந்த வியாழக்கிழமை இந்தியா் ஒருவா் நடத்தும் வன்பொருள்கள் கடையில் குன்தாஜ் படேல் இருந்தாா். அப்போது காவலா் இலியோடா குமிசாமு (21) உள்ளிட்ட சிலா் அந்தக் கடையில் புகுந்தனா்.

காவலா் இலியோடா துப்பாக்கியால் படேலை சுட்டாா். இதில் அவரது மாா்பில் குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து, தாக்குதல் நடத்தியவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக இலியோடா கைது செய்யப்பட்டுள்ளாா். அவருடன் இந்த மற்றவா்களை உகாண்டா போலீஸாா் தேடி வருகின்றனா். கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT