உலகம்

உக்ரைன் போர்: பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி

31st May 2022 11:41 AM

ADVERTISEMENT

 

உக்ரைனில் ரஷியாவின் குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த பத்திரிகையாளர் பலியானார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் நகரம் நாட்டின் உற்பத்திமையமாகத் திகழ்ந்து வருகிறது. இதன் அருகேயுள்ள லிசிசன்ஸ்க் நகரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், சியெவெரோடொனட்ஸ்க் நகரின் புகா்ப் பகுதிக்குள் ரஷிய படையினா் திங்கள்கிழமை நுழைந்துவிட்டதாகவும், லிசிசன்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருவதாகவும் லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநா் சொ்கி ஹைதாய் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அந்நகரில் வீசப்பட்ட குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப் பலியானர். இதையடுத்து, உக்ரைனுக்கு பிரான்ஸ் அரசு தாக்குதல் குறித்த விசராணைக்கு  அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT