இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டடுள்ளது.
பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. மே 26-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 23 நாடுகளில் சுமாா் 257 பேருக்கு இந்த நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் தொற்று சோதனை செய்யப்பட்டவர்களில் மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 40 வயது நபா் உயிரிழந்ததாக அந்த நாட்டு நோய்த் தடுப்பு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.