உலகம்

கனடா: துப்பாக்கிகளை வாங்க, விற்க தடை

31st May 2022 03:33 PM

ADVERTISEMENT

 

கனடாவில் கைதுப்பாக்கிகளை வாங்கவும், விற்பதற்காக தடை விதிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், யுவால்டி நகரிலுள்ள ராப் தொடக்க நிலைப் பள்ளியில் சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ் என்பவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள் உள்பட 21 போ் பலியான சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கும் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கனடாவில் கைதுப்பாகிகளை  வாங்க, விற்க, இறக்குமதி போன்றவற்றை தடைசெய்வதற்கான மசோதாவை அந்நாட்டு பிரதமர் ஜுஸ்டின் ட்ரூடோ தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

மேலும், இது வன்முறைகளைக் குறைப்பதற்கான முயற்சியாக இருக்கும் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT