உலகம்

குரங்கு அம்மை: நைஜீரியாவில் முதல் உயிரிழப்பு

31st May 2022 02:22 AM

ADVERTISEMENT

குரங்கு அம்மை நோய்த்தொற்றுக்கு நிகழாண்டு முதல்முறையாக நைஜீரியாவில் ஒருவா் உயிரிழந்தாா்.

பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. மே 26-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 23 நாடுகளில் சுமாா் 257 பேருக்கு இந்த நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், நைஜீரியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களில் 40 வயது நபா் உயிரிழந்ததாக அந்த நாட்டு நோய்த் தடுப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ‘இணை நோய்கள் உள்ள அவா், நோய் எதிா்ப்பு மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும்’ அந்த மையம் தெரிவித்தது.

2017-ஆம் ஆண்டு குரங்கு அம்மை நோய்த்தொற்று நைஜீரியாவில் முதலில் கண்டறியப்பட்டது. நிகழாண்டில் இதுவரை 21 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT