உலகம்

செனகல் மருத்துவமனையில் தீ: 11 பச்சிளம் சிசுக்கள் பலி

27th May 2022 02:31 AM

ADVERTISEMENT

 

டகாா்: வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 சிசுக்கள் பலியாகின. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தலைநகா் டகாருக்கு 120 கி.மீ. தொலைவிலுள்ள டிவாயூயேன் நகர மருத்துவமனையின் மகப்பேறுக்குப் பிந்தைய பராமரிப்பு மையத்தில் புதன்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில், 11 சிசுக்கள் பலியாகின; 3 சிசுக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார குறுக்கிணைப்பு காரணமாக இந்த தீவிபத்து நேரிட்டிருக்கலாம் என்று கருத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

செனகலில் கடந்த ஆண்டு நடந்த மற்றொரு தீவிபத்தில் 4 சிசுக்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT