உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

27th May 2022 02:39 AM

ADVERTISEMENT

 

லீமா: ஆப்பிரிக்க நாடான பெருவில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

பெருவின் ஆஸாங்கரோ நகருக்கு 13 கி.மீ. தொலைவில், 218 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.2 அலகுகளாகப் பதிவானது என்று அந்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சுற்றியுள்ள நகரங்களில் கட்டடங்கள் குலுங்கி, பொதுமக்கள் பீதிக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT