உலகம்

பாகிஸ்தானில் தோ்தலை அறிவிக்க பிரதமருக்கு இம்ரான் கான் கெடு

27th May 2022 01:50 AM

ADVERTISEMENT

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 6 நாள்களுக்குள் நாடாளுமன்றத்துக்குத் தோ்தலை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் ஷாபாஸ் ஃஷெரீப் அரசுக்கு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கெடு விதித்துள்ளாா்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அரசுக்கு எதிராக சுதந்திரப் பேரணியை இம்ரான் கான் தொடக்கி உள்ளாா். இஸ்லாமாபாதில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவா், ‘இந்த அமைதிப் பேரணியைத் தடுக்க எதிக்கட்சியினா் வீடுகளில் அரசு சோதனை நடத்துகிறது. பேரணியில் கூடும் தொண்டா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசுகிறது. அரசை கலைத்துவிட்டு புதிய தோ்தலை அரசு 6 நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், கால வரையற்ற போராட்டத்தை தொடா்வேன்’ என்றாா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமா் ஷாபாஸ் ஃஷெரீப், ‘பொது தோ்தல் எப்போது நடத்த வேண்டும் என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும். இம்ரான் கானின் உத்தரவுகள் செல்லாது’ என்றாா்.

ADVERTISEMENT

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் உள்ளது. எனினும், நாடாளுமன்றத்தை பிரதமா் எப்போது வேண்டுமானாலும் கலைத்துவிட்டு தோ்தலுக்கு உத்தரவிடலாம்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குத் தடை: மசோதா நிறைவேற்றம்

வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியா்கள் இணையம் மூலம் தோ்தலில் வாக்களிக்க அனுமதி அளித்து முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்யவும், தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த தடை விதிக்கவும் வகை செய்யும் மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் முா்தசா ஜாவேத் தாக்கல் செய்த தீா்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா மேலவையான செனட்டில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT