உலகம்

‘எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்’: அதிபர் ஸெலென்ஸ்கி

DIN

எந்த சூழ்நிலையிலும் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 3 மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைத் தொடர்ந்து மிகப்பெரிய மரியுபோல் ஆலையையும் ரஷியா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தொடர்ந்து ரஷியாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் உக்ரைனில் நிலைமை மோசமடைந்துள்ளது.

அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸ் பகுதியில் ரஷிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியதில் கடுமையான சேதங்களும், பதில் தாக்குதல் தர முடியாத அளவிற்கு ஆயுத இருப்பும் இல்லாததால் உக்ரைன் தனது நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் வேண்டும் என கோரி வருகிறது. 

இதற்கிடையே விடாமல் உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியா தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

மேலும், அப்பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி “ரஷியப் படைகள் அனைத்தையும் அழிக்க முயன்று வருகின்றன. தாக்குதல்களால் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது” என வேதனையைத் தெரிவித்திருந்த நிலையில் நேற்று விடியோவில் பேசிய    ஸெலென்ஸ்கி “ உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை ரஷிய அதிபர் புதின் முழுமையாக புரிந்துகொண்டதாக நான் நம்பவில்லை. போரில் உக்ரைன் தன் நிலத்தை விட்டுக்கொடுக்காது. நாங்கள் எங்கள் நிலத்தில், எங்கள் நாட்டில் போராடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT