உலகம்

டெக்ஸாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான அம்மாவுக்கு மகளின் உருக்கமான அஞ்சலி

26th May 2022 04:52 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான தனது அம்மாவுக்கு அவரது மகள் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் யுவால்டி என்னும் இடத்தில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இந்தத் தாக்குதலில் அந்த பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியை ஈவா மிரல்ஸ் கொல்லப்பட்டார். தனது வகுப்பில் உள்ள குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது அவர் கொல்லப்பட்டார். ஆசிரியை ஈவா மிரல்ஸின் மகள் அடலின் ரூய்ஸ் ட்விட்டரில் தனது அம்மாவுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ என்னுடைய அன்பான அம்மா, நான் உங்களை எப்போதும் மிஸ் செய்கிறேன். நீங்கள் தான் என்னுடைய ஹீரோ. குழந்தைகளை பாதுகாப்பதற்காக உங்களது இன்னுயிரை கொடுத்திருக்கிறீர்கள். உங்களது குரலை கேட்க வேண்டும் போல் இருக்கிறது. காலை வீட்டில் நாய்களுடன் விளையாடிய உங்களுடைய நினைவு என் கண் முன்னே நிற்கிறது. எனக்கு பள்ளி முடிந்ததும் மறக்காமல் தினமும் 4.30 மணிக்கு போன் செய்து பேசுவீர்கள். நான் உங்களுடைய மகள் எனக் கூறிக் கொள்வதில் என்றும் பெருமையடைகிறேன். நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் கூற முடியவில்லை. நீங்கள் இல்லாமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை. நான் உங்களுக்காக இப்படி ஒரு பதிவை எழுதுவேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நீங்கள் தான் எப்போதும் என்னுடைய ஹீரோ அம்மா. நீங்கள் இல்லாமல் நான் எப்படி வாழப்போகிறேன் எனத் தெரியவில்லை. என்னுடைய சிறந்த நண்பர் இப்போது எனக்கு அருகில் இல்லை. நீங்கள் எப்போதும் எனக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள் ” எனப் பதிவிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT