உலகம்

பிரேசில்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலி

26th May 2022 04:52 PM

ADVERTISEMENT

 

பிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர்.

பிரேசில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீராவில் போதைப்பொருள் கடத்தல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம்(மே-24) குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தப்பிச்செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலில் 41 வயது பெண் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT