உலகம்

ஈரான் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

26th May 2022 06:49 PM

ADVERTISEMENT

ஈரான்: ஈரானின் தென்மேற்கு நகரமான அபாடானில் 10 மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தின் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என்று  அந்நாட்டு செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இதுவரை, 37 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குசெஸ்தான் மாகாணத்தின் துணை கவர்னர் எஹ்சான் அப்பாஸ்பூர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். சுமார் 2,000 தொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

திங்களன்று  10 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். இதையடுத்து நகரின் மேயரை அதிகாரிகள் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: பல்கலை. வேந்தராகும் மம்தா: மேற்குவங்கத்தில் ஆளுநர், முதல்வர் மோதல் முற்றுகிறதா?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT