உலகம்

‘ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமையில்லை’

26th May 2022 01:20 AM

ADVERTISEMENT

 

கீவ்: தங்களுக்கு ஆயுத உதவி அளிப்பதில் ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமை இல்லை என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து, ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் காணொலி மூலம் அவா் கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமை என்பது, ரஷியாவிடமிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எங்களுக்கு ஆயுதம் வழங்குவதில் இருக்க வேண்டும். ஆனால், ஐரோப்பிய நாடுகளிடையே அதில் ஒற்றுமை தென்படவில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியான ஜொ்மனி தங்களுக்கு ஆயுதங்கள் அனுப்ப தயங்குவதை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT