உலகம்

’போரால் நிலைமை மோசமடைந்து வருகிறது': ஸெலென்ஸ்கி வேதனை

25th May 2022 03:24 PM

ADVERTISEMENT

 

ரஷியாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 3 மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைத் தொடர்ந்து மிகப்பெரிய மரியுபோல் ஆலையையும் ரஷியா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

மேலும் அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸ் பகுதியில் ரஷிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியதில் கடுமையான சேதங்களும், பதில் தாக்குதல் தர முடியாத அளவிற்கு ஆயுத இருப்பும் இல்லாததால் உக்ரைன் தனது நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் வேண்டும் என கோரி வருகிறது. 

ADVERTISEMENT

இதற்கிடையே விடாமல் உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியா தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், அப்பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி “ரஷியப் படைகள் அனைத்தையும் அழிக்க முயன்று வருகின்றன. தாக்குதல்களால் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது” என வேதனையைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT