உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்காவிற்கு எச்சரிக்கையா?

25th May 2022 04:47 PM

ADVERTISEMENT

வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 3 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதையும் படிக்க | ’போரால் நிலைமை மோசமடைந்து வருகிறது': ஸெலென்ஸ்கி வேதனை

இந்நிலையில் வடகொரிய தலைநகர் பியாங்க்யாங்கிலிருந்து 3 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதன்மூலம் இந்த ஆண்டில் 17ஆவது முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான ஏவுகணையை சோதித்துள்ளது. 

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தென்கொரியாவை கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாகதான் தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | உறக்கத்தைக் கெடுக்கும் காலநிலை மாற்றம்: ஆய்வு முடிவால் அதிர்ச்சி

இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு நடைபெற்ற தென்கொரிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அந்நாட்டின் அதிபர் யோன் சுக் யேல் வலிமையான, திறன்வாய்ந்த எதிர்தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் வடகொரியாவின் இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை கண்டிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT