உலகம்

ஆச்சரியத்தை அளிக்கும் நாசாவின் ‘கேலக்ஸி’ புகைப்படம்

25th May 2022 12:46 PM

ADVERTISEMENT

நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை  வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வரும் நாசா கடந்த சில வாரங்களுக்கு முன்  சூரியனிலிருந்து அதிகப்படியாக கதிர்கள் வெளியாவதாகவும் அதில் வெளிப்படும் வெப்பத்தின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்து சூரியனின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது. 

அதில் சூரியனிலிருந்து வெளியாகும் நெருப்புப் பிளம்புகளின் அளவு அதிகரித்துக் காணப்படும் படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அண்டத்தின் (whirlpool galaxy) புதிய தோற்றப் புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

நீரில் உருவாகும் வளையங்களைப்போல செந்நிறத்தில் காட்சியளிக்கும் கேலக்ஸியின் படம் வைரலாகி வருகிறது.

 

Tags : Nasa galaxy
ADVERTISEMENT
ADVERTISEMENT