உலகம்

கனடா: குரங்கு அம்மையால் இதுவரை 15 பேர் பாதிப்பு

25th May 2022 03:55 PM

ADVERTISEMENT

 

கனடாவில் 15 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பரவியிருந்த நிலையில் பிற நாடுகளுக்கும் இந்நோய் பரவி வருகிறது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. முன்னதாக கனடாவில் 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

இந்நிலையில்,  கனடாவில் இந்த நோயிற்கான அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ததில் அவர்களில் 15 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நோயால் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT